20 வருடங்களாக கமல் ஹாசனை ஒதுக்கி வரும் நயன் தாரா!! கணவர் போட்ட பக்கா பிளான்..
உலக நாயகனாக திகழ்ந்து வரும் கமல் ஹாசன் அவர்கள் தற்போது விக்ரம் படத்திற்கு பின் இந்தியன் 2 படப்பிடிப்பு சென்றுக்கொண்டிருக்கும் இடையில் தயாரிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். கமல் ஹாசன் என்றாலே ஒருசில நடிகைகள் நடிக்க தயக்கம் காட்டுவதுண்டு.
அதற்கு காரணம் அவர் படத்தில் நெருக்கமான காட்சிகள் அதிகம் இருப்பதால் தான். அந்தவகையில் ரஜினிகாந்துடன் ஜோடிப்போட்டு நடித்த நடிகை நயன் தாரா சினிமாவில் அறிமுகமாகி 20 ஆண்டுகளாகியும் இன்று வரை கமல் ஹாசனுக்கு ஜோடியாக நடிக்கவில்லை.

இதற்கு அடிதளம் போட்டிருக்கிறார் நயன் தாரா கணவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். ஏற்கனவே ரவுடி பிச்சர்ஸ் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் ஒரு படத்தின் இயக்க விக்னேஷ் சிவன் தயாராகியிருக்கிறார்.
இப்படத்தில் நடிகை நயன் தாராவும் முக்கிய ரோலில் நடிப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் கமல் ஹாசனும் இப்படத்தில் இணைந்துள்ளார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
இத்தனை ஆண்டுகளாக ஜோடியாக நடிக்க தான் முடியாமல் போனது. நயன் தாரா படத்தை தயாரிக்க முடிவெடித்திருக்கிறார் கமல்ஹாசன். இதை விக்னேஷ் சிவன் கமல் ஹாசனை சந்தித்து பேசியிருப்பதாகவும் கூறப்படுவதால் பல ஆண்டுகள் கழித்து நயன் - கமல் இணையவுள்ளார்கள்.