திருமணத்திற்கு மட்டும் ஓகேவாம்! அதெல்லாம் இப்ப கிடையாது! விக்னேஷுக்கு கண்டீஷன் போட்ட நயன்தாரா..
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில் ஆசையாக காதலித்து வரும் விக்னேஷ் சிவன் இயககத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் தன்னுடைய பிரடொக்ஷன் கம்பனியை வைத்தே தயாரித்து பல கோடி லாபத்தை பெற்று கல்லா கட்டி வருகிறார் நயன்தாரா.
இந்நேரத்தில் 7 வருட கால காதலுக்கு தற்போது தான் முடிவு கட்ட எண்ணம் வந்து இருவரும் ஜூன் 9ல் மகாபல்லிபுரத்தில் கல்யாணம் செய்ய முடிவெடுத்துள்ளனர். திருமண வேலைகள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கையில் நயன் - விக்கி மற்ற விசயங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
தனது சுருக்கமான சருமத்தை சரி செய்வதற்காகவும்,அடிக்கடி நயன்தாரா கருத்தடை மாத்திரையை பயன்படுத்தியதால் அவரது கர்ப்பப்பையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது என பல சர்ச்சையான விசயங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் இதற்காக 6 மாத காலம் ஆயுர்வேத மருத்துவமனையில் ஆறுமாதம் தங்கி இந்த இரண்டு பிரச்சனையையும் சரிசெய்துவிட்டு வருவதாகவும் செய்திகள் பரவியது. இதனால் நயன் தாரா தற்போதைக்கு திருமணம் முடிந்து அங்க செல்லவிருப்பதால் ஹனிமூன் பிளானுக்கு நோ சொல்லி இருகிறாராம்.
ஆனால் இதெல்லாம் கிடையாது என்று நயன் தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் முடிந்து சில நாட்களுக்கு பிறகு தங்களில் அடுத்தடுத்த பிராஜெக்ட்களை முடிக்கவுள்ளதான் ஹனிமூன் பிளான் இல்லை என்று கூறப்பட்டதாம்.
அஜித்தை வைத்து விக்னேஷ் சிவன் கூடிய சீக்கிரமே படப்பிடிப்பை இந்த ஆண்டு இறுதியில் எடுக்கவுள்ளதால் அதற்கான வேலைகளை கடுமையாக உழைக்க வேண்டும் என்று நயன் தாராவும் அப்படத்தில் நடிக்கவுள்ளதாலும் சில படங்களின் கால்ஷீட் பிரச்சனையாலும் தான் இதை ஒதுக்கியுள்ளார்கள் என்று கூறப்படுகிறது.
மற்றபடி நயன் உடலுக்கு எந்த பிரச்சனை சம்மந்தமாக வெளியாவது எல்லாம் பொய் என்று இணையத்தில் கருத்துக்கள் பரவி வருகிறது.