திருமணமாகி 4 மாசம் தானே ஆகுது.. நயன்தாரா - விக்கி இரட்டை குழந்தைகளை பெற்றது எப்படி
Nayanthara
Vignesh Shivan
By Parthiban.A
விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் திருமணம் செய்து கொண்டு நான்கு மாதங்கள் மட்டுமே ஆகிறது. அவர்கள் தாய்லாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஹனிமூன் சென்று திரும்பிய நிலையில் விரைவில் குழந்தை பெற்று கொள்ள போவதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் திடீரென விக்னேஷ் சிவன் தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருப்பதாக அறிவித்து இருக்கிறார்.
அந்த போட்டோ தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
நான்கு மாதங்களில் எப்படி என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அவர்கள் வாடகை தாய் மூலமாக தான் குழந்தை பெற்றிருக்கிறார்கள் என தகவல் வந்திருக்கிறது.


