திருமணத்திற்கு பின் மாறிய வாழ்க்கை! நயன்தாரா விக்னேஷ் சிவன் மொத்த சொத்து எவ்வளவு தெரியுமா?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாகவும் தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. நானும் ரவுடி தான் படத்தின் மூலம் இயக்குனர் விக்னேஷ் சிவன் தொடர்பு கிடைத்து அதன்மூலம் காதலாக மாறியது.
பிரம்மாண்ட திருமணமும் ஹனிமூனும்
நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இப்படத்திற்கு பிறகு காதல் ஜோடிகளாக உலாவி வந்துகொண்டிருந்தனர். இருவருக்கும் எப்போது திருமணம் என்று கேட்டு வந்த நிலையில் கடந்த ஜூன் 9 ஆம் தேதி நயன் தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை கரம் பிடித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு ஒரு வார காலம் தாய்லாந்து ஹனிமூன் சென்ற தம்பதியினர் தற்போது மீண்டும் இந்தியா திரும்பியுள்ளனர்.
ஜவான் படப்பிடிப்பு
ஹனுமூனுக்கு பிறகு நடிகை நயன் தாரா அட்லீ - ஷாருக்கான் கூட்டணியில் உருவாகி வரும் ஜவான் படத்தின் படப்பிடிப்பிற்கு சென்றுள்ளார். இதுவரையில் தனித்தனியாக சொத்து மதிப்பை வைத்திருந்த நயன் - விக்கி ஜோடியின் திருமணத்திற்கு பிறகு அவர்களது சொத்து மதிப்பு விவரம் வெளியாகியுள்ளது.
சொத்து மதிப்பு
தற்போது வரையில் நடிகை நயன் தாராவின் சொத்து மதிப்பாக 165 கோடியாகவும் விக்னேஷ் சிவனின் சொத்து மதிப்பு 50 கோடியாகவும் இருந்து வருகிறது. மொத்தம் சேர்த்து இருவரது சொத்து மதிப்பு 215 கோடியாம்.

வீடு மற்றும் சம்பளம்
ஃபோர்ப்ஸ் பட்டியலில் விக்னேஷ் சிவனின் சொத்து 33 மில்லியன் சாலர் என்றும் சொந்தமாக நயன் பரிசாக கொடுத்த 20 கோடி மதிப்பிலான ஒரு வீடும் உள்ளதாம். இருவரின் பெயரில் போயஸ் கார்டனில் ஒரு வீடும், ஹைதராபாத்தில் 15 கோடியில் ஒரு வீடும், கேரளாவில் அம்மாவுடைய அவரது சொந்த வீடும், சென்னையில் 4 படுக்கை அறைகள் கொண்ட ஒரு வீடும் நயன் தாரா விக்னேஷ் சிவனுக்கு உள்ளதாம்.
நயன்தாரா - விக்னேஷ் சிவன் சொந்த பயன்பாட்டிற்காக சிறு விமானமும் சொந்தமாக வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். இதுதவிர விளம்பரங்கள் மூலம், காஸ்மெடிக் ரீடெய்ல், சாய் வாலே ரெஸ்டாரண்ட் ஸ்டார்ட் அப் நிறுவனம் போன்றவற்றிலும் முதலீடு செய்தும் வருகிறார் நயன் தாரா. தற்போது ஒரு படத்திற்கு 10 கோடி அளவில் இருவரும் சம்பளமாக பெற்று வருகிறார்களாம்.