எவ்வளவு சொத்து வைத்து திருமணம் செஞ்சாலும்? அதுல சமந்தா தான் நம்பர் 1..
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாகவும் லேடிசூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து வருபவர் நடிகை நயன் தாரா. பல ஆண்டுகளாக கோடியில் சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்ந்து முதல் இடத்தில் இருந்து வந்தார்.
சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நயன் தாரா பல கோடி செலவில் தன் கணவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் செலவு செய்துள்ளார்.
திருமணத்தையும் பிரம்மாண்டமாக முடித்திருக்கிறார். இந்நிலையில் நயன் தாராவின் மொத்த சொத்து மதிப்பு வெளியாகியுள்ளது. லேடி சூப்பர் ஸ்டார் ஒரு படத்திற்காக 5 கோடி அளவில் சம்பளமாக பெருவதால் மொத்த சொத்து 71 கோடி இருப்பதாக கூறப்படுகிறது.
இயக்கம், பாடலாசிரியர் என இருந்து சம்பாதித்த விக்னேஷ் சிவனின் சொத்து 50 கோடியாம். நடிப்பு தவிர தன் கணவர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து ரெளடி பிக்சர்ஸ் மூலம் வருமானத்தையும் ஈட்டி வருகிறார் நயன்.
பல ஆண்டுகள் சம்பாதித்து லேடி சூப்பர் ஸ்டாராக இருக்கும் நயன் தாரா, நடிகை சமந்தாவின் சொத்து மதிப்பை விட குறைவாக இருக்கிறார். சமந்தாவின் மொத்த சொத்து கிட்டத்தட்ட 84 கோடியாகும்.
இதில் நடிப்பு தவிர விளம்பர படங்கள், பள்ளி, இன்ஸ்டாகிராம் விளம்பரம் என பகுதியாக கோடியிலும் சமந்தா சம்பாதித்து வருகிறார்.