பார்சிலோனாவில் நயன்தாரா செய்யும் செயல்.. இதுக்கு தான் அங்க கூட்டிட்டு போனீங்களா விக்கி..
நடிகை நயன் தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு நயன் தாரா அம்மாவிடம் கொச்சினுக்கு சென்று ஆசிர்வாதம் வாங்கினர். அதன்பின் தாய்லாந்து, பாங்காக் என்று ஹனிமூனிக்கு பறந்தனர்.

ஹனிமூனில் அங்கு எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ஷாக் கொடுத்து வந்த விக்னேஷ் சிவனை பார்த்து ரசிகர்கள் பொறாமைப்பட்டு கருத்துக்களை தெரிவித்து வந்தனர். அதன்பின், ஹனிமூன் முடித்து ஜ்வான் படப்பிடிப்புக்கு நயன் தாரா சென்றும், செஸ் ஒலிம்பியாக் நிகழ்ச்சியை இயக்க விக்னேஷ் சிவனும் சென்று பிஸியாகினர். கிடைக்கும் நேரத்தில் ஆசை காதல் கணவரை பார்க்க சென்னை வந்து சென்று வந்தார் நயன்.
சமீபத்தில் சென்னை வந்த நயன் தாரா விக்னேஷ் சிவன் செய்த உணவை அருந்தியதில் மயக்கம், வாந்தி எடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பினார்.
இந்நிகழ்வு முடிந்து ஒரு நாளில் நயன் தாராவை கூட்டிக்கொண்டு ஸ்பெயினுக்கு விமானத்தில் பறந்தார். தனி விமானத்தில் கணவர் மடிமீது உட்கார்ந்தும் ரொமான்ஸ் செய்த புகைப்படங்களை வெளியிட்டு ஷாக் கொடுத்தார் விக்னேஷ் சிவன்.

ஸ்பெயின் பார்சிலோனாவில் தங்கியிருக்கும் நயன் தாராவுடன் ரொமான்ஸ் செய்வார் என்று எதிர்பார்த்திருந்தார்கள் ரசிகர்கள். ஆனால் அங்குள்ள கடைகளுக்கு சென்று ஷாப்பிங் செய்துள்ளார் நயன் தாரா. இதுக்க அங்க கூட்டிட்டு போனீங்க விக்கி என்று ரசிகர்கள் கிண்டலடித்து வருகிறார்கள்.

