குழந்தைகள் இல்லாமல் பூஜையா!! குலதெய்வத்திடம் அடைக்கலமான மூக்குத்தி அம்மன்
தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா கடந்த ஆண்டு ஜூன் மாதம் 9 ஆம் தேதி விக்னேஷ் சிவனை 7 வருடங்களுக்கு பின் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணமாகி 4 மாதங்களுக்கு பின் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தையை பெற்றெடுத்தனர் விக்கி - நயன் தம்பதியினர். இதன்பின் தொழில் ரீதியாக பல பிரச்சனைகளும் நடித்த படமும் நயனுக்கு கைக்கூடாமல் போனதாலும் விக்னேஷ் சிவனுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனதாலும் அடுத்தடுத்த பிரச்சனைகளை சந்தித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் விக்னேஷ் சிவன் - நயன் தாராவின் இரட்டை குழந்தைகளின் பெயரை சமீபத்தில் அறிவித்திருந்தனர். உயிர் ருத்ரோநீல் N சிவன், உலக் தெய்விக் N சிவன் என்று பெயரிப்பட்டுள்ளதை நயன் தாராவும் விருதுவிழாவில் தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் தன் மனைவியுடன் கும்பகோணத்தில் இருக்கும் வளத்தூர் ஆற்றங்கரை ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் திருகோவிலுக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்களது குலதெய்வம் என்பதால் எந்த விசேஷமானாலும் இருவரும் அங்கு செல்வதுண்டு.

அப்படி அவர்களின் திருமணம் முதல் இரட்டை குழந்தை பெற்றது முதல் அவர்கள் அங்கு சென்று தான் பூஜை செய்வார்கள். அந்தவகையில் இன்று பங்குனி உத்திரம் என்பதால் தொழில் மற்றும் குடும்ப ரீதியான சறுக்கல்களை போக்க குல தெய்வ வழிபாடு செய்து பரிகாரம் செய்ய சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் பூஜைக்கு தங்களின் இரட்டை குழந்தைகள் விக்கேஷ் சிவன் - நயன் தாராவுடன் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



