பெயரை கெடுக்க இப்படியொரு நாடகமா? நயன்தாராவின் 25 கோடி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நெட்பிளிக்ஸ்
தமிழ் சினிமாவில் நானு ரெளடி தான் படத்தின் மூலம் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலிக்க ஆரம்பித்தவர் நடிகை நயன் தாரா. எப்போது இருவருக்கும் கல்யாணம் என்று பலர் எதிர்பார்த்த நிலையில், கடந்த 7 வருடங்களுக்கு பிறகு விக்னேஷ் சிவனை ஜூன் 9 ஆம் தேதி கரம் பிடித்தார் நயன் தாரா. மாமல்லபுரத்தில் பிரம்மாண்ட முறையில் கடும் பாதுகாப்புடன் நடைபெற்ற திருமணத்தில் முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.
திருமணத்தின் வீடியோ புகைப்பட உரிமையுடன் கவரேஜை நெட்பிளிக்ஸ் நிறுவனம் 25 கோடிக்கு வாங்கியதாக கூறப்பட்டது. நயன் தாரா திருமணத்தை வைத்து இப்படி சம்பாதிக்கிறாரே என்றும் கூறப்பட்டது. திருமணத்தின் போது எடுத்த சில முக்கிய புகைப்படங்களை விக்னேஷ் சிவன் சமுகவலைத்தளத்தில் பகிர்ந்ததால் நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஒப்பந்தத்தில் இருந்து விலகியதாக சில நாட்களுக்கு முன் கூறப்பட்டது.

புகைப்பட பிரச்சனை
திருமணமாகி ஒரு மாதமானதை கொண்டாடி நட்சத்திரங்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் விக்னேஷ்சிவன் வெளியிட்டிருந்தார். திருமணத்தில் நயன் - விக்கி இருவரும் ஒரு பைசா கூட செலவழிக்கவில்லை என்றும் செலவான பணத்தை கொடுக்க வேண்டும் என்று நெட்பிளிக்ஸ் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியதாகவும் கூறப்பட்டது.
ப்ரீ போட்டோஷூட்
ஆனால் தற்போது நெட்பிளிக்ஸ் இந்தியா என்ற சமுகவலைத்தளத்தில் திருமணத்திற்கு முன் ப்ரீ வெட்டிங் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்கள். ரொமாண்டிக் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலானதை தொடர்ந்து, இதுக்கு போய் ஏன் இப்படி நயன் தாரா பெயரை கெடுத்திட்டீங்களே என்று ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.
These images of Nayanthara and Vignesh have us seeing stars ?✨
— Netflix India (@NetflixIndia) July 21, 2022
BRB, we're doing a little happy dance ourselves because THEY’RE coming to Netflix??it’s beyond a fairy tale!! pic.twitter.com/14poQwNAZv
மேலும், நெட்பிளிக்ஸ் நிறுவனம் விரையில் திருமணத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை வெளியிடவுள்ளதாகவும் மற்றொரு தொகுப்பாக, நயன்தாராவின் வாழ்க்கை பயணம் குறித்த சீசன் வெளியாக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
#Nayanthara | நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வுகள் முதல் சீசனாக விரைவில் #Netflix தளத்தில் வெளியாகும்.
— Senthilraja R (@SenthilraajaR) July 21, 2022
அதில் திருமணம் சார்ந்து நடைபெற்ற நிகழ்வுகள் அனைத்தும் இடம்பெறுகின்றன.
அடுத்து நயன்தாராவின் வாழ்க்கை பயணம் குறித்த சீசன் வெளியாக வாய்ப்பு. #VigneshShivan pic.twitter.com/mV5MvVGhUL