ரெஜினாவை மிரட்டினாரா நயன்தாரா!! தலைக்கனத்தில் ஆடினால் இதுதான் நடக்கும்.. பிரபலம்..
நயன்தாரா
தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார் நடிகை நயன்தாரா. ஜவான் படத்திற்கு பின் கன்னடம் - ஆங்கில மொழியில் உருவாகி வரும் டாக்ஸிக் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில், ஐசரி கணேஷ் தயாரிப்பில் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடிக்கவும் இருக்கிறார். சமீபகாலமாக நயன் தாரா பற்றி நெகட்டிவ் கருத்துக்கள் வெளியாகி வருகிறது.
அந்தவகையில் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பூஜையின் போது ரெஜினாவுடன் நயன் தாரா பிரச்சனை செய்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. பூஜையின் போது தனக்கு மட்டும்தான் முன்னுரிமை கொடுக்கப்படும் என்று நினைத்திருந்தாராம் நயன் தாரா. ஆனால் மீனா, குஷ்பூ, ரெஜினா உள்ளிட்டவர்களுக்கு பொன்னாடை போர்த்தியது நயன் தாராவுக்கு கோபத்தை ஏற்படுத்தியதாம்.
மீனா
மேலும் நடிகை மீனா, நயன் தாராவுடன் பேச முயற்சி செய்தும் அவர் கண்டுக்கொள்ளவே இல்லையாம். நயன் தாரா மேடையில் இருந்தபோது ரெஜினா, தன் போனில் செல்ஃபி எடுத்ததால் மேலும் கடுப்பான நயன் தாரா, கேரவனுக்கு வந்து ரெஜினாவுக்கு போன் போட்டு என் அனுமதி இல்லாமல் எப்படி என்னை போட்டோ எடுத்தாய் என்று மிரட்டி இருக்கிறார். இதனால் ரெஜினா அழாத குறையாக மன்னிப்பு கேட்டிருக்கிறார்.
இப்படி இந்த பட பூஜையில் ஒருவரையும் விடாது அனைவரையும் இன்சல்ட் செய்திருக்கிறார் நயன் தாரா. இதனால் சுந்தர் சிக்கு என்ன செய்வது என்று புரியாமல் இருக்கிறாராம். நயன் தாராவுக்கு தலைக்கனம் அதிகமாகியதால் இனிமேல் வீழ்ச்சி தானே தவிர வளர்ச்சி இல்லை.
தயாரிப்பாளராக இருந்தாலும், சக நடிகராக இருந்தாலும், இயக்குநராக இருந்தாலும் யாராக இருந்தாலும் அவருக்கு மரியாதை கொடுக்க வேண்டும். இதே மனபாவத்துடன் நயன் தாரா இருந்தால் அவருடைய வீழ்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என்று பத்திரிக்கையாளர் திண்டுக்கல் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.