நயன்தாரா ஆவணப்படம் இத்தனை கோடிக்கு விற்பனையா? வெளியான தகவல்..
நயன்தாரா
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா, கடந்த 2022ல் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்தார். திருமணத்தை வீடியோ எடுத்து நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திற்கு விற்று அதை ஆவணப்படமாக மாற்ற திட்டமிட்டிருந்தார்.
அதற்கான வேலைகள் இரு ஆண்டுகளாக சென்று கொண்டிருந்த நிலையில், சில நாட்களுக்கு முன் நயன் தாராவின் பிறந்தநாளுக்கு வெளியானது.
நானும் ரவுடி தான் படத்தின் காட்சி இருந்ததால் தனுஷ் இதற்கு 10 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பியது பெரியளவில் பேசப்பட்டது. அதனை மிறியும், Nayanthara Beyond The Fairy Tale என்ற பெயரில் நயன் தாராவின் ஆவணப்படம் ரிலீஸாகியது.
80 கோடிக்கு விற்பனை
இந்நிலையில் இப்படத்திற்காக முதலில் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திடம் 25 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டதாக கூறப்பட்டு வந்தநிலையில், அதெல்லாம் இல்லை 80 கோடிக்கு விற்பனை செய்யப்ப்ட்டது என்று கூறப்பட்டு வந்தது.
இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் என்னது 80 கோடி ரூபாய் மதிப்புக்கு அந்த ஆவணப்படத்தில் எதுவுமே இல்லை, வேண்டுமென்றே இதனை சிலர் கிளப்பிவிடுகிறார்கள் என்று கருத்துக்கள் கூறி வருகிறார்கள்.