திருமணத்திற்கு பின் ரீஎண்ட்ரி கொடுத்த நடிகை நஸ்ரியா.. திடீர் முடிவால் ஷாக்காகும் ரசிகர்கள்..
மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 2006ல் வெளியான பளுங்கு படத்தில் குட்டிப்பெண்ணாக நடித்தார் நடிகை நஸ்ரியா நசீம். அதன்பின் 2013ல் நேரம் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.
பின் ராஜா ராணி, நய்யாண்டி, திருமணம் எனும் நிக்கா, பெங்களூர் டேட்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார். கதாநாயகியாக நடிக்க அறிமுகமாகிய ஒரே ஆண்டி பிரபல மலையாள நடிகர் பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
21 வயதில் திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தையை பெற்ற நஸ்ரியா அதன்பின் சினிமாவில் பெரியளவில் ஈடுபடாமல் வந்தார். 6 ஆண்டுகள் கழித்து டிரான்ஸ் படத்தில் முக்கிய ரோலில் நடித்து ரீஎண்ட்ரி கொடுத்தார்.
அடக்கவுடக்கமாக நடித்து வரும் நஸ்ரியா, இணையத்தில் ஆக்டிவாக இருந்து ஏதாவது ஒரு பதிவினை பகிர்ந்து வருவார். தற்போது சமுகவலைத்தளங்களில் இருந்து சில காரணமாக ஓய்வு எடுக்கவுள்ளார் என்ற தகவலை பகிர்ந்துள்ளார் நஸ்ரியா.
