இன்னும் 20 வாரத்தில் இரண்டாம் குழந்தை! கர்ப்பமான சீரியல் நடிகை நீலிமா ராணி வெளியிட்ட புகைப்படம்..
தமிழ் சின்னத்திரை நடிகைகள் பலர் வெள்ளித்திரையில் கொடிக்கட்டி பறந்து நடித்து வருபவர் வரிசையில் இருப்பவர் நடிகை நீலிமா. தேவர் மகன், பாண்டவர் பூமி உள்ளிட்ட சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார்.
இதையடுத்து தோழி, அண்ணி, சகோதரி கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். மெட்டி ஒலி, கோலங்கள் அத்தி பூக்கள், அரண்மனை கிளி போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானார். இதையடுத்து இசை வாணன் என்பவரை திருமணம் செய்து ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
இதையடுத்து பல ஆண்டுகளாக முதல் குழந்தையை தள்ளிப்போட்டு வந்தார் என்ற செய்தியும் வைரலானது. தற்போது மீண்டும் இரண்டாம் முறை நீலிமா ராணி கர்ப்பமாக இருக்கிறாராம். 20 வாரங்கள் முடிந்து இன்னும் 20 வாரங்கள் இருக்கிறது என்று கூறி கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
வரும் ஜனவரி மாதம் குழந்தை பிறக்கும் என்றும் ஜனவரியில் நால்வராக இருப்போம் என்றும் பதிவிட்டுள்ளார். இதை தெரிவித்ததை ரசிகர்கள் பார்த்து வாழ்த்துக்கள் கூறியும் பாதுகாப்பாக இருங்கள் என்றும் மெசேஜ் செய்து வருகிறார்கள்.