குழந்தை பெற்று நாக சைதன்யாவுடன் செட்டில் ஆக நினைத்தார் சமந்தா!! பிரபலம் சொன்ன தகவல்..
நடிகை சமந்தா, நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்த இவர்கள் சில கருத்து வேறுபாடு ஏற்பட்டு சில ஆண்டுகளில் விவாகரத்து செய்தனர்.
இந்த விஷயம் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. சமந்தா சிலருடன் தொடர்பில் இருந்தார், அது தான் விவாகரத்திற்கு காரணம் என்று சிலர் அவர் மீது விமர்சனம் முன்வைத்தனர்.
சமீபத்தில் நாக சைதன்யா நடிகை சோபிதாவுடன் நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்களுடைய திருமணம் இந்த வருடம் இறுதிக்குள் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சாகுந்தலம் படத்தின் தயாரிப்பாளர் நீலிமா சமந்தா கொடுத்த பேட்டி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர், சாகுந்தலம் படத்தின் கதையை குறித்து பேச சில ஆண்டுகளுக்கு முன்பு சமந்தாவை சந்தித்தேன்.
இந்த படத்தின் கதை அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. அதனால் படத்தில் நடிக்க ஓகே சொன்னார். மேலும் இந்த படத்தை ஜூலை முதல் ஆகஸ்ட் மாதத்திற்குள் திரைப்பட பணிகளை முடிக்குமாறும் கூறினார். இந்த படத்திற்கு பிறகு குழந்தையை பெற்றுக்கொண்டு கணவரோடு செட்டில் ஆகி நேரத்தை செலவழிக்க விரும்புகிறேன் என சமந்தா கூறினாராம்