66 வயதில் கர்ப்பமாக இருக்கிறேனா!! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை நீனா குப்தா..

Pregnancy Gossip Today Bollywood Indian Actress Actress
By Edward Mar 15, 2026 09:45 AM GMT
Report

66 வயதில் கர்ப்பமா

பாலிவுட் சினிமாவில் மூத்த நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை நீனா குப்தா, தன்னுடைய 66 வயதில் தொடர்ந்து படங்களிலும் வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். கொல்கத்தாவை சேர்ந்த நீனா குப்தா, 1982ல் சாத் சாத் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகினார்.

66 வயதில் கர்ப்பமாக இருக்கிறேனா!! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை நீனா குப்தா.. | Neena Gupta Pregnancy Rumor What Is The Truth

அம்லன் குசும் கோஸ் என்பவரை கடந்த 1977ல் திருமணம் செய்து ஒரே வருடத்தில் விவாகரத்து பெற்றார். ஒரு மகள் இருக்கும் நிலையில், சிங்கிள் மதராக இருந்து குழந்தையை வளர்த்து வந்தார். கடந்த 2008ல் தன்னுடைய 49வது வயதில் டெல்லியை சேர்ந்த பட்டய கணக்காளரான விவேக் மிஸ்ராவை 2வது திருமணம் செய்து கொண்டார்.

தற்போது 66 வயதில் நீனா குப்தா கர்ப்பமாக இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ராஷ்மிகா - விஜய் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தன் கணவருடன் கலந்து கொண்டார். அப்போது அவரை பார்த்த பலரும் நீனா குப்தா கர்ப்பமாக இருக்கிறார் என்று வதந்திகள் பரவியது.

66 வயதில் கர்ப்பமாக இருக்கிறேனா!! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை நீனா குப்தா.. | Neena Gupta Pregnancy Rumor What Is The Truth

நீனா குப்தா

இதுகுறித்து நீனா குப்தா கூறுகையில், இது தான் தேவை, இது நிஜ பதாய் ஹோ. எந்த நல்ல செய்தியும் இல்லை, நான் கர்ப்பமாக இல்லை. இதற்கு காரணம் என்னுடைய எடை தடித்து காணப்படுகிறது. அதனால் தான் நான் கொஞ்சம் உடல் பருமனாக இருப்பதுபோல் தெரிகிறேன்.

அதேசமயம் இந்த வயதில் நான் கர்ப்பமாக இருக்கிறேன் போன்ற வதந்திகள் எனக்கு பிடித்திருக்கிறது. நான் முன்னேறி வருகிறோம் என்பதற்கான சான்று தான் இது என்று கூறியிருக்கிறார்.