வில்லி மனைவியாக மாறி சர்ச்சைக்குள்ளான பெண்.. கணவருக்கு இப்படியொரு நோய் இருக்கிறதா?
பிரபல விஜய் தொலைக்காட்சி சேனலில் கடந்த வாரம் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் ட்ரெண்டாகி வருவது நீயா நானா. கோபிநாத் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியில் அதிகமாக சம்பளம் வாங்கும் மனைவி - குறைவாக சம்பாதிக்கும் கணவர்கள் என்ற தலைப்பில் விவாதம் நடந்து.
படிக்காத கணவர்
அதில் சீனி ராஜா என்ற கணவரின் மனைவி, அவரை கிண்டல் செய்து பேசியதும், மகள் ஆசையை நிறைவேற்ற அவர் செய்த செயலை நினைத்து கோபிநாத் சிறந்த தந்தை என்ற பட்டத்தை கொடுத்தார். இந்த சம்பவம் சமீபத்தில் இணையத்தில் வைரலாகியதை தொடர்ந்து அந்த பெண்ணை விமர்சித்து பலர் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
இதுகுறித்து, கவிஞர் தாமரை இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகை பிரியா பவானி சங்கர், நடிகர் சதீஷ் உள்ளிட்ட பலர் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வந்தனர் இந்நிலையில் கணவன், மனைவி, மகளை தனியார் இணையதளம் பேட்டிக் கண்டுள்ளது.
மனைவியை விட்டுக்கொடுக்காத பேச்சு
அதில் தனக்கு டயாலிசிஸ் பிரச்சனை இருப்பதாகவும், வாரம் இருமுறை சிகிச்சை பெறவேண்டும் என்று கூறியுள்ளார். தன்னால் முடிந்த அளவிற்கு மனைவிக்கு உதவியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
தன் மகளை போன்று தன் மனைவியும் எனக்கு தெய்வம் தான் என்று கூறியிருந்தார். மனைவி எப்போது இப்படித்தான் பேசுவார். மனதில் எதையும் வைத்துக்கொண்டு அப்படி பேச மாட்டார் என்றும் தன்னக்கு சப்போர்ட்டாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.