திரிஷாதான் விடாமுயற்சி படத்தில் வில்லியா? பிரபலம் சொன்ன சீக்ரெட்..
விடாமுயற்சி
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் விடாமுயற்சி திரைப்படம் வருகிற பிப்ரவரி 6ஆம் தேதி நாளை வெளியாகிறது. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இப்படத்தை பெரிதும் எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். விடாமுயற்சி படத்தின் டிக்கெட் பல இடங்களில் விற்பனையாகி வரும் நிலையில் முன்பதிவு டிக்கெட் தொடங்கி படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் இருந்து வருகிறார்கள்.
அபிஷேக் ராஜா
இந்நிலையில் பிரபல யூடியூபரும் பிக்பாஸ் பிரபலமுமான அபிஷேக் ராஜா, பேட்டியொன்றில் விடாமுயற்சி படத்தின் கதை பற்றி பகிர்ந்துள்ளார். அதில் விடாமுயற்சி படம் பிரேக் டவுன் படத்தின் ரீமேக் என சொல்லப்பட்டாலும், இந்த படத்தை இங்குள்ள ரசிகர்களுக்கு ஏற்ப மற்றும் அஜித்துக்கு ஏற்ற கதையில் சில மாற்றங்கலை படக்குழுவினர் செய்திருக்கலாம்.
குறிப்பாக கிளைமேக்ஸ் காட்சியில் திரிஷாவே கூட நெகட்டிவ் ரோலில் நடித்து இருக்க வாய்ப்பும் இருக்கிறது. தன் கணவரை பழி வாங்குவதற்காக இவரே காணாமல் போவதுபோலவும் நாடகமாடுவது போலவும் இயக்குநர் கதையில் மாற்றம் செய்திருக்கலாம். இதை கேட்ட ரசிகர்கள் ஒருவேளை அப்படி இருக்கலாமோ என்று அபிஷேக் ராஜா கூறிய கருத்தினை ஆராய்ந்து வருகிறார்கள்.