நீயா நானா!! கோபிநாத் கேட்ட கேள்வி!! உருக வைத்த கணவன் - மனைவி..
நீனா நானா
விஜய் டிவியிக் மக்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று பல ஆண்டுகளாக சிறப்பாக ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று நீனா நானா. தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சியில் வாரம் தோறும் சமூக கருத்துக்களை மையப்படுத்தி இரு குழுவினர்களுக்கு இடையில் விவாதம் செய்யப்படும்.
அந்தவகையில் இந்த வார எபிசோட்டில் மணமுறிவு வரை சென்று மீண்டும் இணைந்த தம்பதிகள் என்ற தலைப்பில் பிரிவுக்கு பின் இணைந்த கணவன் - மனைவிகளை அழைத்து விவாதம் செய்யப்பட்டுள்ளது.
மணமுறிவு வரை சென்று மீண்டும் இணைந்த தம்பதிகள்
அதில் ஒரு பெண், தன் கணவரை பிரிந்து 5 ஆண்டுகளுக்கு பின் என் குழந்தைகளுக்காக சேர்ந்தேன். என்னிடம் என் பசங்க, நீ அப்பாவை விட்டு பிரிந்து தனியாக இருக்கன்னு பசங்க எல்லோரும் வம்புக்கு இழுக்கிறாங்க என்று சொன்னாங்க. எப்போ எனக்கு ரொம்பவும் கஷ்டமாகிவிட்டது.
நாம தனியா இருக்கிறதுனால தானே ஒவ்வொரு ஒவ்வொரு மாதிரி சொல்றாங்க, பரவாயில்லை, எவ்வளவு சண்டையாக இருந்தாலும் நாம சேர்ந்து இருக்கலாம் என்று முடிவு பண்ணினோம் என்று அப்பெண் கூறியிருக்கிறார். அவர் அப்படி சொன்னபோது அவரது கணவர் கண்கலங்கியபடி இருந்துள்ளது அனைவரையும் உருக வைத்துள்ளது.