கடிவாளம் போட்ட சன் பிக்சர்ஸ்? நெல்சனுக்கு நாமம் போடுவாரா சூப்பர் ஸ்டார்..
நடிகை நயன் தாராவை வைத்து கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்த இயக்குனர் நெல்சன். 10 வருடங்களுக்கு முன்பே சிம்புவை வைத்து வேட்டை மன்னன் படத்தை இயக்க சில காரணங்களால் பட வேலைகள் நிறுத்தப்பட்டது.
அதன்பின் கோலமாவு கோகிலா, சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. 100 கோடி லாபத்தை கண்டு பல நூறுக்கு ஆசைப்பட்டு நடிகர் விஜய்யை இயக்க பீஸ்ட் படம் சமீபத்தில் வெளியாகி படுதோல்வியை கண்டது.
பீஸ்ட் படம் வெளியாவதற்கு முன்பே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நெல்சனுக்கு 169 படத்தின் வாய்ப்பை கொடுத்தார். ஆனால், தற்போது அதற்கு முட்டுக்கட்டையாக சன் பிச்சர்ஸ் புது வழிகை சூப்பர் ஸ்டாருக்கு கொடுத்துள்ளது.
சன் பிக்சர்ஸ் ரஜினியிடம் உங்களுக்கு பிடித்தால் நெல்சனை வைத்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால் நாங்கள் இறுதியாக இயக்குனர்களை தருகிறோம் அவர்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
அந்த இயக்குனர்கள் அட்லி, தேசிங்கு பெரியசாமி இப்படி சொல்ல. இதனை எதிர்பார்க்காத நெல்சனுக்கு பெரும் இடியாம அமையப்போகிறதா இல்லை சாதகமாக அமையப்போகிறதா என்பது சூப்பர் ஸ்டார் கையில் தான் இருக்கிறது.