பீஸ்ட் படத்தில் என்னுடைய சீனை கட் செஞ்சிட்டாரு நெல்சன்! உண்மையை உடைத்த ரெடின் கிங்ஸ்லி..
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை நயன் தாராவை வைத்து கோலமாவு கோகிலா என்ற படத்தினை இயக்கி இயக்குனர் அவதாரம் எடுத்தவர் நெல்சன் திலீப்குமார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய நெல்சன் முதல் படமே நல்ல வரவேற்பு பெறும் அளவிற்கு வெற்றியை தந்தார்.
அதன்பின் நண்பராக இருக்கும் சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தினை இயக்கி 100 கோடி வசூலை ஈட்டினார். இப்படத்திற்கு நடிகர் விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தையும் இயக்கி லாஜிக் இல்லாத படம் என்ற விமர்சனத்தை பெற்றதோடு எங்கு சென்றாலும் வெச்சு செய்யும் அளவிற்கு மாறியுள்ளார்.
நெல்சன் அவர் படங்களில் நடித்த பல நட்சத்திரங்களை அடுத்தடுத்த படங்களிலும் நடிக்க வைப்பார். அப்படி நடிக்க வைத்து நெல்சனால் பிரபலமானவர்களில் ஒருவர் ரெடின் கிங்ஸ்லி. தனித்துவமான நடிப்பால அனைவரையும் கவர்ந்த ரெடின் கிங்ஸ்லி ரஜினிகாந்தின் அண்ணாத்த உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போது பல படங்களில் நடித்து வரும் ரெடின், வல்லி மயில் படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேட்டி கொடுத்துள்ளார். அப்போது பீஸ்ட் படத்தில் பல காட்சிகளில் நடித்திந்தேன் எனவும் அதை நெல்சன் நீக்கிவிட்டார் என்று கூறியுள்ளார்.
படம் நல்லாதான் பண்ணி இருக்கிறார் என்று பீஸ்ட் படத்தின் விமர்சனத்திற்கு பதிலளித்துள்ளார். மேலும் சூப்பர் ஸ்டாருக்காக கதையை வேறவெவலில் எழுதியும் வருகிறார், கேஎஸ் ரவிக்குமார் தான் இயக்கம்ன்னு சொல்றது எல்லாம் பொய் என்றும் தெரிவித்துள்ளார்.