ஒரே ஒரு பிளாப் படம் தான்! நெல்சனை அவமானப்படுத்திய விருதுவிழாவை வெச்சு செய்யும் நெட்டிசன்கள்..

Beast Nelson Dilipkumar Jailer
By Edward Apr 01, 2023 12:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் நெல்சன் திலீப்குமார். டாக்டர் படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தினை இயக்கினார்.

ஆனால் படம் சிலர் எதிர்மறையான விமர்சனத்தை பெற்று நெல்சனை கலாய்க்கும் அளவிற்கு மாறியது. நெல்சனை நம்பி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.

படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வரும் நிலையில் நெல்சன் தனியார் ஊடகம் வழங்கிய விருதுவிழாவிற்கு சென்றிருக்கிறார். அந்நிகழ்ச்சிக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வரும் போது பவுன்சர்கள் சூழ அணிவகுத்து இளே அழக்கப்பட்டார்.

ஆனால் நெல்சன் மற்றும் ரெடின் கிங்ஸ்லி வரும் போது யாரும் அவர்களை கண்டுக்கொள்ளவில்லை.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாக ஜெயிலர் படம் வெளியாகட்டும் என்றும் ஒரு தோல்வி படம் கொடுத்துவிட்டார் என்பதற்காக தனியார் ஊடகம் இப்படி நடந்து கொண்டதை ரஜினி ரசிகர்கள் அவர்களை கலாய்த்தபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

GalleryGallery