நயன்தாரா செருப்பை திருடி மறைத்த இயக்குனர்!! மேடையில் கணவர் முன் உடைத்த நெல்சன்..
தமிழ் சினிமாவில் டாக்டர், பீஸ்ட் போன்ற படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் நெல்சன். சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தினை இயக்கி சூப்பர் ஹிட் கொடுத்த நெல்சன், விஜய்யின் பீஸ்ட் படத்தினை இயக்கத்தால் பல விமர்சனங்களுக்கு ஆளாகினார்.
அதன்பின் சூப்பர் ரஜினிகாந்த் அவர்களை வைத்து ஜெயிலர் படத்தினை இயக்க ஆரம்பித்தார். தற்போது பிஸியாக ஜெயிலர் படப்பிடிப்பு சென்று கொண்டிருக்கும் போது சில அப்டேட்களை படக்குழுவினர் வெளியிட்டும் வருகிறார்கள்.

இந்நிலையில் நெல்சன் குறித்த ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தனியார் ஊடக விருதுவிழாவிற்கு கலந்து கொண்டு விருதினை வாங்கியிருந்தார் நெல்சன். விருதுவிழாவிற்கு நடிகை நயன் தாராவும் வந்திருந்தார்.
அப்போது மேடையில் பேசிய நெல்சன், கடந்த ஆண்டு கோலமாவுக்கு விருது வாங்கும் போது நயன் தாரா இல்லாததால், அவருக்கு நன்றி கூற ஆசைப்பட்டேன். இந்த விருது விழாவிற்கு அவர் வந்து கிளம்ப போவதாக முன்பே கூறினார்.
அதனால் நயன் தாராவின் செருப்பை திருடி மறைத்து வைத்துவிட்டேன். ஆரம்பத்தில் நயன் தாரா, அனிருத் இருவரும் தான் என்னுடன் இருந்தார்கள். அவர்களுக்கு நன்றி என்று காமெடியாக கூறியிருக்கிறார் நெல்சன்.