நினைச்ச மாதிரி பெரிய ஹீரோ படம் பண்ண விடமாட்டாங்க.! இதுக்கு இதான் அற்தமா நெல்சா?

nelson anirudh sunpictures beast
By Edward Apr 14, 2022 01:57 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் நடிப்பில் இன்று வெளியான படம் பீஸ்ட். இப்படத்தின் மூலம் தனது 4 வது படத்தினை இயக்கி இருந்தார். சிம்புவை இயக்கிய படம் சில காரணங்களால் நிறுத்தப்பட்டு பல ஆண்டுகளாகி இயக்குனர் நெல்சன் கோலமாவு கோகிலா படத்தினை நடிகை நயன் தாராவை வைத்து இயக்கினார்.

அதன்பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் படத்தை இயக்கினார். இந்த இரண்டு படங்களுமே மாபெரும் வெற்றியடைந்தது. இப்படங்களை தொடர்ந்து, தளபதி விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கியுள்ளார்.

இப்படம் இன்று வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் தோல்வியடைந்துள்ளது. படம் குறித்து பல பேட்டிகளை வழங்கிய நெல்சன் பிரமோஷன் விஷயத்தில் பொருமையாக பேசி ரசிகர்களை ஈர்த்தார்.

ஆனால் இதற்கு முன்பு நெல்சன் பல இயக்குனர்கள் முன்னிலையில் நடைபெற்ற பேட்டியொன்றில் நம்ம நினைச்ச மாதிரி படம் பண்ணனும்னா பெரிய ஹீரோ ஒத்துக்கமாட்டாங்க என கூறியிருந்தார்.

இந்த செய்தி பரவலாகி வரும் நிலையில் பீஸ்ட் படமும் விமர்சனம் ரீதியாக தோல்வியடைந்து காணப்படுவதால் நெல்சன் இயக்கத்தை இனிமேல் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்ற கேள்வி எழுந்து வருகிறது.