நெல்சனுக்கு டாட்டா காமிக்க போகிறாரா சூப்பர்ஸ்டார்? புது ரூட்டுக்கு மாறிய பீஸ்ட் இயக்குனர்..

nelson superstar rajinikanth thalaivar169
By Edward Apr 12, 2022 08:40 AM GMT
Report

தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தவர் இயக்குனர் நெல்சன். இப்படத்திற்கு முன் நடிகர் சிம்புவை வைத்து வேட்டை மன்னன் படத்தினை இயக்கி அப்படம் சில காரணங்களால் நிருத்தப்பட்டது.

இதையடுத்து நயன் தாரா, யோகிபாபுவை வைத்து கோலமாவு கோகிலா படத்தினை இயக்கி நல்ல வரவேற்பு பெற்றார். இதையறிந்து நண்பர் தானே என்று கூறி நடிகர் சிவகார்த்திகேயன் வாய்ப்பு கொடுக்க டாக்டர் படத்தினை இயக்கி 100 கோடி வசூலை கொடுத்தார் நெல்சன்.

பின் விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தினை இயக்கினார். படமே வெளியாகாத நேரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நெல்சனுக்கு 169 படத்தின் வாய்ப்பை கொடுத்துள்ளார். தலைவர் 169 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவுப்பு வெளியாகி படப்பிடிப்பு அக்டோபர் மாதம் ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்பட்டது.

பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகவுள்ள இப்படத்தின் இடைவெளியில் சூப்பர் ஸ்டார் ஓய்விற்காக அமெரிக்கா செல்லவுள்ளார். அங்கு சென்றால் பல மாதங்களாகும் இடையில் எதாவது பிரச்சனையில் மாற்றலாம் என்றும் கூறப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் அமெரிக்காவில் இருந்து வந்து படப்பிடிப்பு வேலைகள் ஆரம்பிக்க தாமதமாகும் என்று உணர்ந்த நெல்சன் என்ன செய்யலாம் என்று புலம்பி வருகிறாராம்.

எடுத்த எடுப்பிலே நயன் தாரா, சிவகார்த்திகேயன், விஜய், ரஜினி என இருந்த நெல்சன் கிடைக்கும் நேரத்தை வீணாக்காமல் வேறொரு நடிகர் பக்கம் செல்லலாமே என்று யோசனையில் இருக்கிறாராம்.