கமல்ஹாசன் லோகேஷ்க்கு கார் வாங்கி குடுத்தா என்னைய ஏன்டா அடிக்கிறீங்க! நெல்சன் பரிதாபங்கள்..
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தியேட்டரில் கடந்த 3 ஆம்தேதி வெளியான படம் விக்ரம். மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுடன் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றும் நல்ல விமர்சனத்தையும் பெற்றும் திருப்திபடுத்தியுள்ளது.
5 நாள் வசூலில் இதுவரை 200 கோடியை பாக்ஸ் ஆபிஸை பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதை கொண்டாட கமல் ஹாசன் பலருக்கு நன்றிகளை கூறி வீடியோவை வெளியிட்டார்.
மேலும் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜுவுக்கு சுமார் 65 லட்சம் மதிப்புள்ள ஆடம்ப காரினை வாங்கி கொடுத்துள்ளார். மேலும் லோகேஷ் கனகராஜின் 13 உதவி இயக்குனர்களுக்கும் இருசக்கர வாகனத்தை பரிசாக அளித்துள்ளார் கமல்ஹாசன்.
இதற்கு பலர் இணையத்தில் வாழ்த்து கூறியதோடு பீஸ்ட் பட இயக்குனர் நெல்சன் திலீப்குமார் பக்கம் திரும்பியுள்ளனர். லோகேஷ் கனகராஜுக்கு கார் வாங்கி கொடுத்ததுக்கு என்னைய ஏண்டா வெச்சு செய்றீங்க என்ற மீம் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Lokesh Kanagaraj now.. pic.twitter.com/hzoT1v84VI
— Blue Sattai Maran (@tamiltalkies) June 8, 2022

