சூர்யா செய்த தவறால் விழுந்த விஜய்.. தூக்காமல் அப்படி இயக்குனர் செய்த காரியம்..
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சூர்யா. 8வது படிக்கும் போதே சிவகுமாரின் மகன் என்பதால் சில வாய்ப்புகள் வந்தது. ஆனால் அப்படி வேண்டாம் என்று படிப்பை நிறுத்தி என் குடும்பத்தில் 25 ஆயிரம் ரூபாய் கடனை அடைக்க வேலைக்கு சென்றேன்.
அதன்பின் அந்த கடனை அடைக்கும் பொறுப்பால், 80 கிலோமீட்டம் பயணம் செய்து வேலைக்கு சென்று வந்தேன். இதைதொடர்ந்து தான் எனக்கு நடிப்பில் ஆர்வம் வந்தது நடிக போகிறேன் என்று கூறியதும் என் நண்பர்கள் கூட கேலி செய்தார்கள்.

நீயெல்லாம் நடிக்க போறியா என்று கேட்டதும் அதை செய்து காட்டியே ஆகவேண்டும் என்று நினைத்து தான் நேருக்கு நேர் நடித்து 50 ஆயிரம் சம்பளம் வாங்கினேன் என்று சூர்யா சமீபத்திய பேட்டியில் கூறியிருந்தார். அப்படி இருந்த சூர்யா தற்போது தேசிய விருது வாங்கும் நடிகராக திகழ்கிறார்.
இந்நிலையில் சூர்யா, விஜய் நடித்து வெளியான நேருக்கு நேர் படத்தினை பற்றிய ஒரு சம்பவத்தை அதன் இயக்குனர் வசந்த் சில ஆண்டுகளுக்கு முன் பகிர்ந்துள்ளார். சில பிரச்சனைகள் காரணமாக அஜித் அப்படத்தில் இருந்து விலகிவிட்டதால் சூர்யா நடித்தார். அப்படி சூர்யா பைக் ஓட்டி விஜய் பின்புறம் உட்கார்ந்து பரபரப்பான காட்சி அமைக்கப்பட்டது.

அந்த காட்சியின் போது சூர்யா பைக் ஓட்டும் நிலையில் தடுமாறி இருவரும் கீழே விழுந்துவிடுவார்கள். அந்தவிபத்து உண்மையில் நடந்தது.
ஏன் இதை கட்செய்ய வேண்டும் கதைக்கு ஏற்ப நன்றாக இருக்கட்டும் என்று அப்படியே விட்டுவிட்டேன் என்று இயக்குனர் வசந்த் கூறியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
— chettyrajubhai (@chettyrajubhai) September 5, 2022