அலையவிட்ட நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம்!! மாரடைப்பு ஏற்பட்டு மதுவுக்கு அடிமையான பிரபல இயக்குநர்..
அனுராக் காஷ்யப்
பாலிவுட் சினிமாவில் பிரபல இயக்குநராக திகழ்ந்து வரும் அனுராக் காஷ்யப், தமிழில் இமைக்கா நொடிகள், மகாராஜா, லியோ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். சமீபத்தில் அனுராக் அளித்த பேட்டியொன்ற்ல், நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தால் தனக்கு நடந்த மோசமான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

அதில், நான் கையால் எழுதிய ஸ்கிரிப்ட்டை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்திடம் கொண்டு சென்றேன், ஆனால் அங்கிருப்பவர்கள் யாரும் இந்தப்படத்தை தயாரிக்க முடியாது என்று கூறிவிட்டனர். அதுதான் எனக்கு கோபத்தை தூண்டியது.
நெட்ஃபிளிக்ஸ்
அதனை ஈடு செய்யும் விதமாக சுமாரான திரைக்கதை கொண்ட படங்களை அனுப்பி இதுபோல் வேண்டும் என கேட்டார்கள். நான் அவர்களிடம் இது மிக சாதாரணமான கதைகள், எனக்கு நேரம் வேண்டும் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் முடியாது, எங்களிடம் நடிகர்களின் கால்ஷீட் கிடைத்திருக்கிறது, உடனே படம் பண்ண வேண்டும் என்று கூறினார்கள். அதற்கு நான் என்னால் முடியாது, உங்களுக்கு நான் படம் பண்ண வேண்டுமென்றால் எனக்கு நேரம் வேண்டும் என்றேன். நான் இன்னொரு ஸ்கிரிப்டை அவர்களிடம் கொடுத்தேன், அவர்களுக்கு அது பிடித்திருந்தது.

இது நன்றாகவுள்ளது என்று கூறியவர்கள் திடீரென ஒரு நாள், மணி ஹெய்ஸ்ட் போல் ஒரு சீரியஸை இந்தியாவை மையப்படுத்தி எடுக்க முடியுமா? என்று கேட்டார்கள். என்னதான் நினைக்கிறீர்கள் என்று நான் அவர்களிடம் விலகிவிட்டேன். இது முடிந்து நான் தெரபிக்கு செல்ல வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன். நீங்கள் அதிக நேரம் எடுத்து குழந்தை போல் ஒரு ஸ்கிரிப்ட்டை உருவாக்கியுள்ளீர்கள், அது கலைந்துவிட்டது.
சோகத்தில் இருந்த எனக்கு மாரடைப்பே வந்துவிட்டது, ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டேன். 2வது லாக்டவுன் சமயத்தில், சொமேட்டோவில் ஆர்டர் செய்து மது குடித்துக்கொண்டிருந்தேன். உடலுக்கு ஆரோக்கியமான எதையும் சாப்பிடவில்லை, இதனால் 8 மாதங்களில் 35 கிலோ எடை கூடிவிட்டது. என்னுடைய தீவிர மது பழக்கத்தால் என் மகள் கவலை கொண்டாள் என்று அனுராக் காஷ்யப் தெரிவித்துள்ளார்.