ரவி மோகன் படவிழாவில் அவமானமா போச்சு!! வேதனையை சொன்ன நடிகை வினோதினி...

Gossip Today Mansoor Ali Khan Pradeep Ranganathan Ravi Mohan
By Jai Aug 21, 2026 02:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக நடித்து வரும் நடிகர் மன்சூர் அலி கான், பட நிகழ்ச்சி ஒன்றில், கருப்பு படத்தின் பாடல் காட்சியில் தான் நடித்த காட்சி இல்லை என்று கூறி தன்னுடைய வேதனையை வெளிப்படுத்தியது பேசு பொருளானது. அவரை தொடர்ந்து பேசிய நடிகை வினோதினி, தனக்கு நடந்த ஒரு சம்பவத்தை கூறி மன்சூர் அலி கானை சமாதானப்படுத்தியிருக்கிறார்.

வினோதினி

அதில், கடந்த 2019ல் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ரவி மோகன் நடிப்பில் கோமாளி படத்தில் மிக முக்கியமான ரோலில் வினோதினி நடித்திருந்தார். படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரித்த நிலையில், கோமாளி படம் தொடர்பான நிகழ்ச்சிக்கு வினோதினி அழைக்கப்பட்டிருந்தார்.

ரவி மோகன் படவிழாவில் அவமானமா போச்சு!! வேதனையை சொன்ன நடிகை வினோதினி... | Vinodhini Shared Bad Incident During Comali Movie

இதற்காக ஒரு மணி நேரம் மேக்கப், உடை என்று நேரல் செலவழித்து அந்நிகழ்ச்சிக்கு சென்றால், கடைசி இருக்கைக்கு இரண்டு வரிசை முன்னால் உட்கார வைக்கப்பட்டாராம். மேடையில்கூட தன்னை அழைத்து பேசவில்லை, இதனால் கோபமடைந்து அங்கிருந்து கிளம்பியிருக்கிறார்.

அதேபோல் படம் வெளியானப்பின் சென்னையிலுள்ள ஈகா தியேட்டரில் பார்க்க சென்றபோது அவருடைய காட்சிகள் வந்ததும் அருகிலிருந்த பெண் ஒருவர் கட்டிப்பிடித்து அழுதுள்ளார்.

அதனால் இந்நிகழ்வை குறிப்பிட்டு படங்களோ, மற்ற இடங்களோ நீங்கள் இருட்டடிப்பு செய்தாலும் இந்த உலகம் அதனைப்பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது, நிச்சயமாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார் வினோதினி.