ஏற்றிவிட்ட ஏணியை அசிங்கப்படுத்தும் ஜோதிகா!! பாலிவுட் போனதும் இப்படி பேசிட்டாங்க...திட்டும் நெட்டிசன்ஸ்..
நடிகை ஜோதிகா இந்திய சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவர். இவர் தற்போது பாலிவுட் பக்கம் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் படங்கள் நடித்து 4 ஆண்டுகள் ஆகிவிட்டது.
ஜோதிகா பேட்டி
சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தென்னிந்திய சினிமா ஒரு ஆணாதிக்க சினிமா உலகமாக இருக்கிறது. பாலிவுட் சினிமாவோடு ஒப்பிடும்போது தென்னிந்திய சினிமாவில் ஆணாதிக்கம் அதிகம். அங்கு பெரும்பான்மையாக எழுதப்படும் கதைகளும் ஆண்களின் கதாபாத்திரங்களை மையமாக வைத்துதான் எழுதப்படுகிறது. பெண் கதாபாத்திரங்கள் வெறுமென ஹீரோவிற்கு ஜோடியாக மட்டுமே எழுதப்படுகிறது.
ஹீரோவுடன் நடனம் ஆடுவதற்கும், கிறுக்குத்தனமாக எதாவது செய்வதுமாக மட்டுமே இருக்கும். இப்போது அவை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. நானுமே ஒரு காலத்தில் அப்படி படித்துக்கொண்டிருந்தேன். ஆனால், இதனை புரிந்துகொண்டு, அதிலிருந்து என்னை மாற்றி நடித்துக்கொண்டு வருகிறேன் என்று கூறியிருந்தார்.
சந்திரமுகி
இதற்கு தென்னிந்திய சினிமாவில் பலரும் ஜோதிகா கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். மேலும், சந்திரமுகி படத்தில் உங்களுக்கு கொடுக்கப்பட்ட ரோல் நியாபகம் இல்லையா என்று நெட்டிசன்கள் கலாய்த்தும் திட்டித்தீர்த்தும் வருகிறார்கள்.