திரும்பவும் முதல்ல இருந்தா.. முடியலடா! வானதைப்போல சீரியலை வெச்சி செஞ்ச நெட்டிசன்கள்

Serial Sun Tv Vanathaipola
By Parthiban.A Dec 31, 2021 09:50 AM GMT
Report

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானதைப்போல சீரியல் டிஆர்பியில் எப்போதும் டிஆர்பியில் டாப் 5ல் இருந்து வருகிறது. அண்ணன் - தங்கை சென்டிமென்டை வைத்து நகர்ந்து வருகிறது இந்த தொடர். ரஜினிகாந்தின் அண்ணாத்த படம் இந்த சீரியல் கதை போல் இருக்கிறது என்று தான் நெட்டிசன்கள் அதிகம் ட்ரோல் செய்தனர்.

வனத்தைப்போல சீரியலில் இன்றைய ப்ரோமோவை பார்த்து நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர். சின்ராசு அவரது மாமாவை அடிப்பது போன்ற சீன் தற்போது மீண்டும் வருகிறது. அதை பார்த்து ராஜபாண்டி கோபமாவதும் காட்டப்பட்டது இருக்கிறது.

சின்ராசு மற்றும் துளசி நடிகர்கள் மாற்றப்பட்டு உள்ள நிலையில் மீண்டும் அதே போன்ற சீன் மீண்டும் மீண்டும் வருகிறதே என நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளி வருகின்றனர்.

"திரும்பவும் முதல்ல இருந்தா முடியலடா" என கமெண்டில் அவர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.