திட்டமிட்டு விசில் சின்னத்தை வாங்கிய விஜய்!! கமல் நடனத்தை வைத்து கலாய்க்கும் நெட்டிசன்கள்...
தமிழக வெற்றிக்கழகம்
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்திற்கு தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை ஒதுக்கி தகவலை வெளியிட்டது. இது தமிழக வெற்றிக் கழகம் எதிர்கொள்ளும் முதல் தேர்தல் என்பதால், இக்கட்சி போட்டியிடாத மற்ற தொகுதிகளிலும் விசில் சின்னத்தை சுயேட்சையாக நிற்பவர்களுக்கு வழங்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதாவது தவெகவுடன் மாற்றுக்கட்சியினர் கூட்டணி வைக்கும்போது, அக்கட்சியினர் அந்த கட்சிக்கான சின்னத்தில் போட்டியிடும் போது அந்த தொகுதியில், விசில் சின்னம் சுயேட்சை வேட்பாளருக்கு வழங்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.

விசில் சின்னம்
இப்படியிருக்கையில் விஜய் ரசிகர்கள் பலரும், விசில் சின்னத்தை மனதில் வைத்து கடந்த சில ஆண்டுகளாகவே விஜய் திட்டம் தீட்டி வந்துள்ளார்.
அதை சரியாக இம்பிளிமெண்ட் செய்தும் வந்திருக்கிறார் என்று பாராட்டி வருகிறார்கள். விஜய் நடித்த படமான பிகில் படத்திலும் கோட் படத்திலும் விசில் போடு என்ற பாடலுக்கு நடனமாடியிருக்கிறார்.
தனது கட்சிக்கு தற்போது விசில் சின்னத்தை கேட்டும் பெற்றிருக்கிறார் விஜய். இது பக்கம் இருக்க, விசில் சின்னம் தவெக கட்சிக்கு கிடைத்ததை வைத்து நெட்டிசன்கள் 1970ல் வெளியான மாணவன் படத்தில் விசிலட்சிச்சான் என்ற பாடலுக்கு கமல் ஹாசன் நடனாடுவதை வைத்து, இந்த பாட்டு பொருத்தமாக இருக்கு என்று கலாய்த்து வருகிறார்கள்.
இந்தபாட்டு இன்னுமா Trend ஆகாம இருக்கு...😂
— நாகராஜசோழன் MA_MLA (@VDRcva_twitss) January 22, 2026
விசிலடிச்சான் குஞ்சுகளா 😂 pic.twitter.com/b8QBPP4ih5