விஜய் மகன் சஞ்சய்-க்கு ஜோடியாக போட்டிப்போடும் 18 வயது வாரிசு மகள்கள்!! தேவயானி மகளுக்கு டஃப் கொடுக்கும் வனிதா மகள்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் தன்னுடைய வாரிசாக இருக்கும் மகன் ஜேசன் சஞ்சய்யை வெளிநாட்டில் சினிமா படிப்பை படிக்க வைத்திருந்தார்.
சஞ்சய்யும் படிப்பை முடித்து குறும்படத்தினை இயக்கி வெளியிட்டும் இருந்தார். இதேசமயம் அப்பாவை போல் மகன் சஞ்சய் ஜேசனும் நடிப்பில் கவனம் செலுத்துவார் என்றும் கூறப்பட்டது. மேலும் விஜய் மகன் சஞ்சய் தன் மகளுக்கு ஜோடியாக நடிக்கவைக்க போவதாக தேவயானி கணவர் ராஜகுமாரன் கூறியிருந்தார்.
இந்நிலையில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை வனிதா மகள் ஜோவிகாவும் இந்த லிஸ்ட்டில் இணைந்திருக்கிறார். தற்போது 18 வயதை தாண்டி பிறந்த நாள் பார்ட்டியை நடத்தி போட்டோஷூட்டும் எடுத்திருக்கிறார் ஜோவிகா.
ஒரு பேட்டியில் தன் மகள் சினிமாவில் நடிக்க வைக்கப்போவதாகவும் தெரிவித்த நிலையில் சஞ்சய்க்கு ஜோடியாக அடுத்த இளம் வாரிசும் ரெடி என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.