இளையராஜாவுக்கு பின் முன்னணி நடிகர்கள் வசம் சிக்கிய அனிரூத்! சொத்தப்பிடாத அனி..

anirudh don vikram beast thalaivar169 ilaiyaraaja ak62
By Edward Mar 21, 2022 08:26 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும் இசைஞானியாகவும் இருப்பவர் இளையராஜா. 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் இசையமைத்து வந்த இளையராஜா 60களில் இருந்தே பிஸி இசையமைப்பாளராக இருந்து வந்தார். ஒரு வருடத்தில் பல படங்களில் வேலை செய்தும் வந்திருக்கிறார்.

அப்படி அவரை போல் யாரும் அந்தளவிற்கு படங்களில் பணியாற்றியது கிடையாது. இந்நிலையில், அவர் இடத்தினை பிடிக்க குறுகிய காலக்கட்டத்தில் பிடித்திருப்பவர் தான் அனிருத்.

3 படத்தின் மூலம் இசையமைப்பாளராகி அடுத்தடுத்த படங்களிலுக்கு கம்போஸ் செய்து பிரபலமானார். ரஜினி, அஜித், விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படங்களில் பணியாற்றினார்.

இந்நிலையில் ஒரே வருடத்தில் டாப் இடத்தில் இருக்கும், ரஜினியின் தலைவர் 169, தளபதி பீஸ்ட், அஜித்62, கமலின் விக்ரம், இந்தியன் 2, சிவகார்த்திகேயனின் டான், விஜய் சேதுபதியின் காத்து வாக்குல ரெண்டு காதல், தனுஷின் திருச்சிற்றம்பலம் போன்ற நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்கிறார்.

இப்படி இருக்கையில் அனைத்து ரசிகர்களின் பேராதரவை பெற்ற அனிருத் யார் வன்மத்திலும் சிக்காமல் இருந்தாலே போதும் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.