அடுத்த லேடி சூப்பர் ஸ்டார் இவரா? நயன்தாராவை ஓரங்கட்ட போகும் 90ஸ் கனவுக்கன்னி!

Nayanthara Samantha Trisha Vignesh Shivan
By Edward Jul 12, 2022 03:37 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக பல ஆண்டுகளாக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. சமீபத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவனை 7 வருடங்களுக்கு பிறகு திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் முடிந்த கையோடு ஹனிமூன் என்று ஜாலியாக இருந்து பின் நயன்தாரா ஜவான் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். தற்போது கையிருப்பு படங்களுக்கு பிறகு நயன் தாராவின் மார்க்கெட் குறைய வாய்ப்புள்ளதாகவும் கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் வரும் செப்டம்பர் 30ல் வெளியாகவுள்ள படம் பொன்னியின் செல்வன். அதன் டீசர் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதிலும் நடிகை திரிஷாவின் ரோல் மிகப்பெரிய பிளஸ்-ஆக இருக்க இருப்பதால் அவர் மீது பெரிய நம்பிக்கையை விதைத்துள்ளது குந்தவை கதாபாத்திரம். அப்படியொரு அழகில் குந்தவை இருப்பதை பார்த்த நெட்டிசன்கள் திரிஷாவுக்கு ஹார்ட்டின் விட்டு வருகிறார்கள்.

இதனால் கண்டிப்பாக திரிஷாவின் அடுத்தடுத்த வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கும். அப்படி இருந்தால் திரிஷாவின் மார்க்கெட் அதிகரித்து லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை அடுத்து தட்டிச்சென்று விடுவார். ஒரு கோடி சம்பளம் கூட வாங்காமல் இருக்கும் திரிஷா தற்போது பொன்னியின் செல்வன் படத்தால் சம்பளத்தை ஏற்றிவிடுவார் என்றும் கூறப்படுகிறது.

GalleryGallery