அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் கிடையாது சிவகார்த்திகேயன் தானா? வீடியோவை பார்த்து மிரளும் ரசிகர்கள்..
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இன்று வரை விளங்கி வருபவர் நடிகர் ரஜினிகாந்த். தன்னுடைய ஸ்டைலிஷ்-ஆன நடிப்பால் மக்கள் மத்தியில் அதிகமாக ஈர்த்து வருபவர். இந்தியாவை தாண்டி உலகம் முழுவதில் தன்னுடைய ரசிகர்கள் பட்டாளத்தை கோடிக்கணக்கில் வைத்து வருகிறார்.
இவருக்கு அடுத்து யார் சூப்பர் ஸ்டார் பட்டத்தினை பெறுவார்கள் என்ற கேள்வி தற்போதைய முன்னணி நடிகர்களிடம் எழுந்து வருகிறது. அப்படி அடுத்த சூப்பர் ஸ்டார் தளபதி விஜய் தான் என்று பல நட்சத்திரங்கள் உட்பட கூறி வருகிறார்கள்.
ஆனால் தற்போது அதை உடைத்து நடிகர் சிவகார்த்திகேயன் பெயர் இடம் பெற்று வருகிறது. அதற்கு காரணம் சூப்பர் ஸடாரின் தீவிர ரசிகர் என்ற பெருமை தான். ரெமோ படத்தில் சூப்பர் ஸ்டார் போஸ்டரை பார்த்து ஒரு நாள் என் போஸ்டரும் தியேட்டரில் வரும் என்ற காட்சியை வைத்திருப்பார்.
அந்தவகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அப்படி பின்பற்றி வருகிறார் சிவகார்த்திகேயன்.தற்போது மண்டேலா படத்தின் இயக்குனர் மோடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மாவீரன் என்ற படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
படத்தின் பூஜை நேற்று ஆரம்பிக்கப்பட்டு படத்தின் டைட்டிலுடன் உறுதியான தகவலை படக்குழு வீடியோ மூலம் வெளியிட்டுள்ளனர். வீடியோ காட்சியில் சிவகார்த்திகேயன், தளபதி படத்தில் ரஜினிகாந்த் ரெட் சர்ட் அணிந்ததை போலவும் 80களில் வெளியான ரஜினியின் மாவீரன் படத்தின் போஸ் போன்றும் இருக்கிறாது. மேலும் ரஜினிமுருகன், மாவீரன் என்று சிவகார்த்திகேயன் ரஜினிகாந்தை மையப்படுத்திய படங்களில் நடித்து வருகிறார்.
இதனை பார்த்த ரசிகர்கள் அடுத்த சூப்பர் ஸ்டார் பிராண்ட் சிவகார்த்திகேயன் தான் என்று புகழ்ந்து வருகிறார்கள்.
