தனுஷுக்காக பணமே வாங்காமல் அதை செய்வேன்!! ஓப்பனாக பேசிய சிம்பு பட நடிகை..

Ajith Kumar Dhanush Silambarasan Gossip Today Nidhhi Agerwal
By Edward Nov 30, 2022 05:00 PM GMT
Edward

Edward

Report

தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் நித்தி அகர்வால். தமிழில் நடிகர் சிம்புவின் ஈஸ்வரன் படத்தின் மூலம் அறிமுகமாகினார் நிதி அகர்வால். இப்படத்தினை தொடர்ந்து சிம்புவுடன் நெருக்கமாக அவரை திருமணம் செய்யவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பானது.

ஆனால் அதெல்லாம் எப்படி வெளியாகிறது எனக்கு தெரியாமல் என்று வதந்திக்கு முற்றுப்புள்ளியும் வைத்திருக்கிறார். சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கலகத்தலைவன் படத்தில் நடித்தும் இருந்தார். படத்தில் நல்ல வரவேற்பு பெற்று பல பேட்டிகளை கொடுத்தும் வருகிறார் நிதி அகர்வால்.

அப்படி சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், தமிழில் யார் படத்தில் சம்பளம் வாங்காமல் நடிப்பீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு நிதி அகர்வால், நடிகர் தனுஷுடன் என்று கூறியுள்ளார்.

ஒரு நல்ல ஆக்டர் தான் தனுஷ் என்று கூறியிருக்கிறார். மேலும் யார் தம்பியாக நடிக்க வேண்டும் என்பதற்கு அஜித் புகைப்படத்தை எடுத்திருக்கிறார். ஆனால், அஜித் எனக்கு தம்பி, அண்ணா ரோலில் நடிக்க மாட்டேன், அவருடன் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் என்று கூறியுள்ளார்.

Gallery