பிரபாஸ் பட நிகழ்சியில் நிதி அகர்வாலுக்கு நடந்த கொடுமை!! வைரலாகும் வீடியோ..
நிதி அகர்வால்
ஜெயம் ரவியின் பூமி, சிம்புவின் ஈஸ்வரன், கலகத் தலைவன், ஹரி ஹர வீர மலு படங்களில் நடித்து, தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை நிதி அகர்வால். இவர் இதற்கு முன் தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தற்போது பிரபாஸ் நடிப்பில் உருவாகி அடுத்த ஆண்டு ரிலீஸாகவுள்ள தி ராஜா சாப் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார் நிதி அகர்வால்.

இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிக்காக ஹைதராபாத் சென்றுள்ள நிதி அகர்வால், நிகழ்ச்சியை முடித்துவிட்டு கிளம்பியிருக்கிறார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கிய நிதி அகர்வால், ரசிகர்களின் சீண்டலால் கஷ்டப்பட்டுள்ளார்.
குறித்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வரும் நிலையில், இதை கண்டித்து நிதி அகர்வால் ஒரு பதிவினை டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Absolutely pathetic arrangements by @shreyasgroup. 😡 Zero proper security and zero management plan in place. You need to take responsibility for this mess.
— Nidhhi Agerwal (@NidhhiAgerwl_FC) December 18, 2025
#NiddhiAgerwal pic.twitter.com/FpXmBs3ZNm