காசுக்காக இப்படி பண்ணுவியா.. சிம்பு பட ஹீரோயினை விளாசும் நெட்டிசன்கள்

video alcohol troll Nidhhi Agerwal
By Parthiban.A Jan 06, 2022 01:42 PM GMT
Report

சிம்புவின் ஈஸ்வரன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நிதி அகர்வால். அவருக்கு தமிழ் ரசிகர்கள் கோவில் கட்டினார்கள் என்ற செய்தியையும் கேட்டிருப்பீர்கள். அந்த அளவுக்கு அவர் தமிழ்நாட்டு இளைஞர்களை கவர்ந்து இருக்கிறார்.

தற்போது ஹீரோ என்ற தெலுங்கு படத்தில் ஹீரோயினாக நடித்து இருக்கிறார் அவர். இந்நிலையில் சமீபத்தில் நிதி அகர்வால் இன்ஸ்டாகிராமில் ஒரு மது பிராண்டின் விளம்பர வீடியோவை வெளியிட்டு இருந்தார். அதை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் 'மது உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடியது' என குறிப்பிட்டு அதை நீக்கும்படி கேட்டு வருகின்றனர்.

மேலும் சிலர் 'காசுக்காக இப்படி எல்லாம் செய்வீங்களா' என கேட்டு விளாசி வருகின்றனர்.