நமக்கு ஒரு ஆடு சிக்கிடுச்சி! நிச்சயம் செய்த நிக்கி கல்ராணி மைண்ட் வாய்ஸ்..
தமிழ் சினிமாவில் அக்கடத்தேசத்து நடிகைகள் அறிமுகமாகி முன்னணி நடிகையாகி பிரபலமாவது சகஜம். அப்படியொரு இடத்தினை பிடித்தவர் நடிகை நிக்கி கல்ராணி. ஜிவி பிரகாஷுடன் டார்லிங் படத்தில் நடிக்க ஆரம்பித்து, யாகாவராயினும் நா காக்க, கோ2, வேலைன்னு வந்துட்டா வேலைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு போன்ற படங்களில் நடித்தார்.
மேலும் மலையாளம், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் நடித்து வந்த நிக்கி கல்ராணி நடிகர் ஆதியுடன் மரகத நாணயம், யாகாவராயினும் நா காக்க படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். அப்படத்தில் நடிக்க ஆரம்பித்தது முதல் இருவருக்கும் கெமிஸ்ட்ரி ஏற்பட காதலித்தும் வந்ததாக கூறப்படுகிறது.
இருவரும் டேட்டிங் சென்ற புகைப்படங்கள் ஆதி வீட்டு விஷேசத்திற்கு நிக்கி கல்ராணி சென்று வருவதுமாக இருந்துள்ளார். தற்போது சில தினங்களுக்கு முன் குடும்பத்தினர் சம்மதத்துடன் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
அங்கு எடுத்த சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. நமக்கு ஒரு ஆடு சிக்கிடுச்சி என்று கூறுவது போன்று நிக்கி கல்ராணி ஆதியை கட்டியணைத்து பார்த்துக்கொண்டு எடுத்த புகைப்படத்தை நெட்டிசன்கள் கிண்டல் செய்தும் வருகிறார்கள்.