மீ டூ ஒரு கன்றாவியான விசயம்!! வைரமுத்துவை இழிவு படுத்தும் சின்மயியை சீண்டிய பிரபல நடிகை..
சினிமாத்துறை மட்டும் இல்லாமல் பல துறைகளில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் நடந்து வருவது சகஜமாகிவிட்டது. அது சினிமாத்துறை பெரியளவில் பார்க்கபடுவதால் அந்த குற்றச்சாட்டுக்கு பல இடங்களில் பிரபலமாகிவிடும்.
அப்படி தமிழ் சினிமாவின் பாடலாசிரியராக திகழ்ந்து வரும் வைரமுத்து மீது சில ஆண்டுகளுக்கு முன் பிரபல பின்னணி பாடகி சின்மயி தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்று கூறி வைரமுத்து மீது புகாரளித்தது பெரியளவில் பேசப்பட்டது.
இதுகுறித்து விளக்கம் அளித்த சின்மயி இடம் செய்தியாளர்கள், அப்போதே சொல்லி இருக்கலாமே என்றும் அவரை திருமணத்திற்கு அழைத்து அவரிடம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க வேண்டிய அவசியம் என்ன என்றும் கேள்வியை எழுப்பினார்.
அப்போது பெரிய அரசியல் பலம் வைரமுத்துவிடம் இருந்ததால் அதை அப்போது கூற முடியவில்லை என்று சின்மயி பதிலளித்திருந்தார். சின்மயிக்கு பிறகு தான் பல நடிகைகள் மீ டூ மூலம் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை வெளியில் கூறி வந்துள்ளனர்.
இந்நிலையில் மீடு குறித்தும் அதன்மூலம் புகார் அளிப்பவர்கள் குறித்து பிரபல நடிகை வெண்ணிற் ஆடை நிர்மலா பேட்டியொன்றில் வெளுத்து வாங்கியிருக்கிறார்.
அந்தகாலத்தில் மீ டூ மாதிரியான பிரச்சனைகள் இல்லை என்றும் மீ டூ என்பது ஒரு கன்றாவியான விசயம் என்றும் கூறியுள்ளார். ஏதோ தனக்கு ஒரு வேலை நடக்க வேண்டும் என்று தானே அதற்கு ஒத்துக்கொண்டு செல்கிறார்கள்.
அந்த மனிதர் பேரன் பேத்திகளுடன் ஒரு நல்ல அந்தஸ்த்தில் இருக்கிறார். இப்போதைக்கு வந்து பேசுகிற அவர்கள் ஏதோ ஒரு விதத்தில் வேலை நடக்க வேண்டும் என்று போனவர்கள் அப்போதே என்னவோ செய்துவிட்டு அப்பவே ஏன் பேசாமல் இருந்தார்கள் என்று சரமாறியாக கேட்டு வெளுத்து வாங்கியிருக்கிறார் வெண்ணிற ஆடை நிர்மலா.