கமலுடன் சேர்ந்து அந்த காட்சியில் நடிக்க மாட்டேன்.. விடாமல் துரத்திய இயக்குனர்
சூரசம்ஹாரம்
உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் சித்ரா லட்சுமணன் இயக்கத்தில் 1988 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சூரசம்ஹாரம். இப்படத்தில் கதாநாயகியாக நிரோஷா நடித்திருந்தார்.
சூரசம்ஹாரம் படத்தில் முத்தம் காட்சி இடம் பெற்றால் நன்றாக இருக்கும் ஷூட்டிங்கில் படக்குழுவினர் நினைத்தார்களாம். இயக்குனர் சித்ரா லட்சுமணன் நிரோஷாவிடம் இது குறித்து விவரித்து அனுமதி கேட்டாராம். அந்த சமயத்தில் நிரோஷாவும் ஒப்புக்கொண்டாராம்.
மனக்கசப்பு
அடுத்த நாள் இந்த காட்சி படமாக்கும் போது நிரோஷா முத்தம் கொடுக்கும் காட்சியில் நடிக்க மறுத்துவிட்டாராம். முதலில் நடிக்கிறேன் என்று கூறிவிட்டு தீடிரென்று மறுத்ததால் சித்ரா லட்சுமணனுக்கு நிரோஷா மீது மனக்கசப்பு ஏற்பட்டதாம். அதுவும் இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட மூன்று நாட்கள் பேசி கொள்ள வில்லையாம்.
கடைசியில் நிரோஷா முத்தம் காட்சியில் நடிக்க ஓகே சொல்லவிட்டாராம் ஆனால் கமல் இந்த காட்சி வேண்டாம் என்று கூறிவிட்டாராம்.