நடிகை காஜல் அகர்வாலின் தங்கை நிஷா மகனா இது!! குடும்பத்துடன் எடுத்த அழகிய புகைப்படம்
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை காஜல் அகர்வால். பழனி படத்தில் பரத்திற்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டார்.
அதன்பின் முன்னணி இடத்தினை பிடித்து கோடியில் சம்பளமாகி மார்க்கெட் எகிரும் நேரத்தில் கெளதம் கிச்சுலு என்பவரை காதலித்து திருமணம் செய்தார். காஜல் அறிமுகமாகிய நேரத்தில் அவரது தங்கை நிஷா அகர்வாலும் ஒருசில படங்களில் நடித்து வந்தார்.
சரியான வரவேற்பு கிடைக்காமல் திருமணம் செய்து ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார் இந்நிலையில் அக்கா காஜல் இடையில் விட்ட இடத்தினை பிடிக்க அவரது தங்கை நிஷா அகர்வால் திருமணத்திற்கு பின் களமிரங்கியுள்ளார்.
போட்டோஷூட்டில் ஆர்வம் கொண்டு அக்காவுடன் எடுத்த கிளாமர் புகைப்படங்கள் மற்றும் தனியாக எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வந்துள்ளார். தற்போது குடும்பத்துடன் எடுத்த அழகிய அவுட்டிங் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் நிஷா அகர்வால்.

