ரெண்டே Seat!! புதிய சொகுசு காரை வாங்கிய அம்பானி மனைவி நீதா அம்பானி!! இத்தனை கோடியா?
அம்பானி மனைவி நீதா
ஆசியாவின் நம்பர் பணக்காரர்களில் டாப் இடத்தில் இருப்பவர் தான் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி. முகேஷ் அம்பானி - நீதா அம்பானி தம்பதிக்கு ஆகாஷ் அம்பானி, இஷா அம்பானி, அனந்த் அம்பானி என்ற மூன்று குழந்தைகள் பிறந்து தற்போது மூவரும் திருமணமாகி, குடும்பத்தையும் பிசினஸையும் பார்த்து வருகிறார்.
அம்பானி குடும்பம் என்றாலே பிரமாண்டத்திற்கு பேர் போனவர்கள் தான். தாங்கள் அணியும் ஆடை அணிகலன்கள் முதல் செல்லும் கார் வரை ஆடம்பரமாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ரோல்ஸ் ராய்ஸ், உள்பட பல சொகுசு கார்களை வைத்திருக்கும் அம்பானி குடும்பத்தினருக்கும் நீதா அம்பானி 100 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு சொகுசு காரை வாங்கியுள்ளார்.
Audi A9 Chameleon
இந்தியாவிலேயே அதிக விலையுடைய Audi A9 Chameleon என்ற காரை தான் நீதா அம்பானி வாங்கியிருக்கிறார். உலகளவில் வெறும் 11 கார்கள் மட்டுமே இந்த மாடலில் இருக்கிறது. காரின் ரூப் முதல் விண்டோஸ்க்ரீன் வரை ஒரே கண்ணாடியில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
5 மீட்டர் நீலம் கொண்ட இந்த காருக்கு மொத்தம் 2 கதவுகளும் என்ஜின் திறன் 4.0 லிட்டர் வி 8 மாடல் என்ஜின் இருக்கிறது. 600 குதிரை திறன் கொண்ட இந்த கார் 0 டூ 100 கிலோ மீட்டர் வேகத்தை அடைய வெறும் 3.5 வினாடிகளில் எட்டிவிடும்.
250 கிலோ மிட்டர் வேகத்தில் செல்லும் இந்த ஆடி கார் மட்டுமின்றி நீதா அம்பானி ஆடி ஏ9 சேம்லான், ரோல்ஸ் ராய்ஸ் Phantom VIII EWB, மெர்சிடஸ் Maybach S600, பெராரி 812 சூப்பர் பாஸ்ட், பெண்ட்லே காண்டினெண்டல் பிளையிங் ஸ்பர், ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன், பிஎம்டபிள்யூ 7 சீரியஸ் 760 லி செக்யூரிட்டி உள்ளிட்ட பல சொகுசு கார்களை வாங்கியுள்ளார்.