அம்பானி மனைவி நீதா அம்பானியின் வாய் பிளக்க வைக்கும் வாட்டர் பாட்டிலின் விலை..
நீதா அம்பானி
ஆசியாவின் பணக்காரர்கள் லிஸ்ட்டில் டாப் இடத்தில் இருப்பவர் தான் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி. முகேஷ் அம்பானி - நீதா அம்பானி தம்பதிக்கு ஆகாஷ் அம்பானி, இஷா அம்பானி, அனந்த் அம்பானி என்ற மூன்று குழந்தைகள் பிறந்து, தற்போது மூவரும் திருமணமாகி, குடும்பத்தையும் பிசினஸையும் பார்த்து வருகிறார்.

அம்பானி குடும்பம் என்றாலே பிரமாண்டத்திற்கு பேர் போனவர்கள் தான். தாங்கள் அணியும் ஆடை அணிகலன்கள் முதல் செல்லும் கார் வரை ஆடம்பரமாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
ரோல்ஸ் ராய்ஸ், உள்பட பல சொகுசு கார்களை வைத்திருக்கும் அம்பானி குடும்பத்தினருக்கும் நீதா அம்பானி 100 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு சொகுசு காரை சமீபத்தில் வாங்கினார். தற்போது நீதா அம்பானி பயன்படுத்தும் ஒரு வாட்டர் பாட்டிலின் விலை தலையை சுற்ற வைத்துள்ளது.

வாட்டர் பாட்டிலின் விலை
அதாவது நீதா அம்பானி, Acqua di Cristallo Tributo a Modigliani என்ற உலகின் மிகவும் விலையுயர்ந்த தண்ணீர் பாட்டில்களில் ஒன்றை பயன்படுத்துகிறார். 24 கேரட் தங்க முலாம் பூசப்பட்ட இந்த பாட்டிலின் விலை சுமார் ரூ. 44 லட்சமாம். இந்த பாட்டிலை நீதா அம்பானி பயன்படுத்துவதாக பரவிய புகைப்படம் மார்ஃபிங் செய்யப்பட்டதாக கூறப்பட்டாலும், உலகில் இவ்வளவு விலையுயர்ந்த குடிநீர் ஒருப்பதே பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.