நித்யா விஷயத்தில் கமல் ஹாசன் என்ன செய்தார்! கடுமையாக திட்டிய தாடி பாலாஜி மனைவி..
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து சின்னத்திரை தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் தாடி பாலாஜி. பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் 2 சீசனில் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு முன் அவரது மனைவி நித்யாவிற்கு அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட மகளை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார் தாடி பாலாஜி.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் டிஆர்பியை ஏற்ற நித்யாவையும் வீட்டிற்குள் அனுப்பியிருந்தனர் நிகழ்ச்சி குழு. நிகழ்ச்சியில் இருவரும் சகஜமாக பேசி வந்த நிலையில் சேருவார்கள் என்றும் கமல் ஹாசன் உட்பட பலர் எண்ணி இருந்தனர். ஆனால் நிகழ்ச்சிக்கு பிறகு அந்த பிரச்சனை பெரியளவில் உடைந்தது.
பிக்பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொண்ட பாலாஜி நித்யாவை பற்றி சில விஷயங்கள் பேசியுள்ளார். இதனை கண்டித்து நித்யா புகாரளித்து கண்டபடி பேசியிருந்தார். தற்போது நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த தாடி பாலாஜி, தன் மகள் போஷிகா வாழ்க்கையை கெடுத்து வருவதாகவும் நிகழ்ச்சிக்காக மகளை பரிட்சை எழுதவிடாமல் தடுப்பதாகவும் கூறி புகாரளித்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோவில் அதிகமாக பயன்படுத்துவதால் கடுமையான கமெண்ட்கள் என் மகளுக்கு எதிராக வருவதாகவும் கூறியிருந்தார்.மேலும் விவாகரத்து கேட்டதற்கு 12 லட்சம் காசு கேட்டூம் மிரட்டுகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார் தாடி பாலாஜி.
இந்நிலையில் தாடி பாலாஜி பற்றிய விஷயங்களை சமீபத்தில் அளித்த பேட்டியில் கோபத்துடன் பேசியுள்ளார் நித்யா. இங்க்கு பேசி எனக்கு என்ன தீர்வு கிடைக்கப்போகிறது. உங்களுக்கு கண்டண்ட் தான் கிடைக்கும். நான் எங்கு பேசினால் நீதி கிடைக்குமோ அங்கு பேசிக்கொள்கிறேன் என்று பதிலளித்தார்.
அதன்பின் பிக்பாஸ் வீட்டில் உங்களை கமல் ஹாசன் கூப்பிட்டு அறிவுரை கூறினாரே அது என்ன என்று கேட்டுள்ளனர். அதற்கு நித்யா, 'யாரு அவரா? வேண்டாங்க. அவர பத்தி பேச வச்சிராதீங்க. நான் நிறைய கன்டன்ட் வெளிய விட்டுருவேன்.
அவர மாதிரி மோசமான கேரக்டர என் லைப்ல பாத்தது இல்ல. வேண்டாம் என்ன நிறைய பேச வச்சிராதீங்க என்று கூறியுள்ளது அதிர்ச்சியை கொடுத்துள்ளது.