36 வயது, திருமணமே வேண்டாம்.. நித்யாமேனன் நோ சொல்வதற்கு இதுதான் காரணமா?
நித்யாமேனன்
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழிகளில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்தவர் நித்யாமேனன்.
தமிழில் இவர் நடித்து வெளியான மெர்சல், திருச்சிற்றம்பலம் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இவருக்கு கொடுத்தது.
இதில், குறிப்பாக திருச்சிற்றம்பலம் திரைப்படம் ஃபிலிம் ஃபேர் விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது. கடைசியாக நித்யா மேனன் இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி ஜோடியாக காதலிக்க நேரமில்லை என்ற படத்தில் நடித்துள்ளார்.
தற்போது, 36 வயதாகும் நித்யாமேனன் திருமணம் செய்யாமல் இருக்கிறார். இந்நிலையில், இந்த முடிவுக்கான காரணம் என்ன என்பது குறித்து சமீபத்தில் அவர் பேசி இருக்கிறார்.
இதுதான் காரணமா?
அதில், "என் பெற்றோர்கள் என்னிடம் வந்து திருமணம் செய்து கொள் என எப்போது கூறினாலும், நீங்கள் திருமணம் செய்துகொண்டு 100% சந்தோசமாக இருக்கீங்களா? அப்படி இல்லை என்றால் எனக்கு ஏன் recommend செய்கிறீர்கள்?" என கேட்பேன். யார் திருமணம் பற்றி கேட்டாலும் அதே கேள்வியை தான் கேட்பேன்" என்று கூறியுள்ளார்.