நித்தியானந்தா சாமியார் மரணம் வதந்தியா? உண்மையா? ரூ. 4000 கோடி சொத்து யாருக்கு?
நித்தியானந்தா
கைலாசா என்ற தனித்தீவை உருவாக்கி சர்ச்சைகளில் சிக்கும் ஒருவராக இருந்து வருபவர் நித்தியானந்தா. இந்தியாவில் இருந்து வெளியேறி கைலாசாவில் வசித்து வரும் நித்தியானந்தாவிற்கு உடல்நிலை சரியில்லை என்றும் கோமாவில் இருப்பதாகவும் செய்தி வெளியானது.
கடந்த 2 நாட்களுக்கு முன் இறந்துவிட்டதாக தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஆனால் அவர் உயிரிழ்ந்துவிட்டதாக கைலாச நாட்டில் இருந்து எந்த மறுப்பு செய்திகள் வரவில்லை.
இந்நிலையில் நித்தியானந்தாவின் சகோதரி மகன் சுந்தரேஸ்வரன், ஞாயிற்றுக்கிழமை வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் தனது பிரசங்கத்தின் போது இந்து தர்மத்தை காப்பதற்காக சாமி உயிர் தியாகம் செய்துவிட்டதாக அறிவித்தார்.
4000 கோடி சொத்து
காவல்துறையின் வழக்குகளில் இருந்து தப்பிக்க அவர் இறந்துவிட்டதாக நாடகம் நடத்தி இருக்கலாம் என்று சிலர் கூறி வருகிறார்கள்.
ஒருவேளை நித்தியானந்தா உயிரிழந்து இருந்தால் ரூ. 4000 கோடி சொத்துக்களும் நடிகை ரஞ்சிதாவின் கட்டுப்பாட்டிற்குள் வந்துசேரும் என்றும் அதற்கும் 4 பேர் போட்டிக்கு வருவார்கள் என்றும் கூறப்படுகிறது.