நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் நடிகை நிவேதா பெத்துராஜ் திருமணம் நின்றுவிட்டதா?
நிவேதா பெத்துராஜ்
தமிழ் சினிமாவில் ஒரு நாள் கூத்து திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ்.
அப்படத்திற்கு பின் இவர் நடித்த டிக் டிக் டிக், சங்கதமிழன், திமிரு புடிச்சவன் என தமிழில் தொடர்ந்து நடித்தவர் தெலுங்கிலும் நிறைய ஹிட் படங்களில் நடித்து வந்தார்.
கடைசியாக 2023ம் ஆண்டு இவரது நடிப்பில் படம் வெளியானது, அதன்பின் சினிமா பக்கம் அதிகம் தலைக்காட்டவில்லை. நடிகை நிவேதா பெத்துராஜ் சமீபத்தில் தனது காதலர் உடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு இருந்தார்.
பின் அக்டோபர் மாதம் காதலர் ரஜித் இப்ரான் உடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மேலும் அடுத்த வருடம் ஜனவரியில் திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

நின்றுவிட்டதா?
இந்நிலையில், நிவேதா பெத்துராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து காதலருடன் நிச்சயமான புகைப்படங்களை நீக்கியுள்ளார். தற்போது இந்த விஷயம் மிகப்பெரிய அதிர்ச்சியை அவரது ரசிகர்களுக்கு அளித்துள்ளது.
இதுவரை தனது திருமணம் நின்றுவிட்டது குறித்தும் காதல் பிரேக்கப் ஆனதாகவோ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. விரைவில் அவர் மெளனம் கலைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.