வினுஷாவின் உடலை வைத்து வர்ணித்து பேசி விவகாரம்!! தப்பை உணராத நிக்ஷன்..
பிக்பாஸ் 7 சீசன் தற்போது விறுவிறுப்பான இறுதி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறது. எலிமினேட்டாகிய போட்டியாளர்கள் மீண்டு பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து பல விசயங்களை பேசி வருகிறார்கள்.
அப்படி நிக்ஷன், வினுஷாவை பற்றி உடல் ரீதியாக வர்ணித்து பேசிய பிரச்சனை பற்றி ஏதாவது நடக்குமா என்று ரசிகர்கள் இணையத்தில் கேள்விக்கேட்டு காத்திருந்தனர். தற்போது நிக்ஷன், வினுஷா அது பற்றிய பேசிய பிரமோ வீடியோவை பிக்பாஸ் வெளியிட்டுள்ளார்.

ஐஷுவிடம் பேசிய அந்த விசயம் எனக்கு அப்போது தப்பாக தோனவில்லை என்றும் அதை வைத்து உள்ளே என்னை பண்ணாங்க, வெளியில் அதைவிட பண்ணாங்க, எனக்கு உங்களிடம் சாரி சொல்லனும் தோணுச்சி, மன்னித்துவிடுங்கள் என்று கூறியிருக்கிறார் நிக்ஷன்.
அதற்கு வினுஷா, நீ பேசியது தப்புன்னு தெரிஞ்சிடுச்சி, உனக்கே தெரியுது அது, எதுன்னு சொன்னது. நீங்கள் அந்த இடத்தில் மன்னிப்பு கேட்டிருந்தால், அது தப்பாக போயிருக்கு, எனக்கு கஷ்டமாக இருந்து இருக்கு என்று தோன்றியதால் சாரி சொல்றிங்க, அந்த சாரி செல்லாது என்று கேள்வி கேட்டுள்ளார்.
அதற்கு நிக்ஷன், திரும்பத்திரும்ப அதை ரிஜிஸ்டர் செய்வது போல் எனக்கு தோன்றுகிறது என்று பதில் கொடுத்துள்ளார். இதை கேட்ட நெட்டிசன்கள் இன்னும் திருந்தாத நிக்ஷன் என்றும் தப்பை உணராதவர் என்றும் திட்டித்தீர்த்து வருகிறார்கள்.