பண மோசடி வழக்கில் சிக்கிய பாகுபலி பட நடிகை.. பிரபாஸுடன் குத்துடாட்டம் ஆடிய நடிகைக்கு இப்படியொரு நிலையா

Nora Fatehi
By Kathick Sep 04, 2022 08:00 AM GMT
Report

பெங்களூருவை சேந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர் சுமார் ரூ. 200 கோடியை, பிரபல தொழிலதிபரிடம் இருந்து மிரட்டி வாங்கியதாக கடந்த 2019ஆம் ஆண்டு அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக நடிகை ஜாக்லின் ஃபெர்னான்டஸ் மற்றும் நோரா ஃபதேஹியிடம் விசாரணை நடைபெற்று வந்தது.

பண மோசடி வழக்கில் சிக்கிய பாகுபலி பட நடிகை.. பிரபாஸுடன் குத்துடாட்டம் ஆடிய நடிகைக்கு இப்படியொரு நிலையா | Nora Fatehi Enquired By Police For Money Fraud

இதில் நடிகை நோரா ஃபதேஹியிடம் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் 7 மணி நேரம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நடைபெற்ற இந்த விசாரணையில் ஜாக்லின் ஃபெர்னான்டஸுக்கும் தனக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்றும், சுகேஷ் சந்திரசேகரின் மனைவி தான், என்னை பல நிகழ்ச்சிகளில் பார்த்து பேசுவார் என்றும் நடிகை நோரா ஃபதேஹி கூறியுள்ளாராம்.

பண மோசடி வழக்கில் சிக்கிய பாகுபலி பட நடிகை.. பிரபாஸுடன் குத்துடாட்டம் ஆடிய நடிகைக்கு இப்படியொரு நிலையா | Nora Fatehi Enquired By Police For Money Fraud

அதுமட்டுமின்றி சுகேஷ் சந்திரசேகரிடம் தனது மேலாளர் தான் இதுவரை பேசியுள்ளார் என்றும், தான் அதிகமாக அவரிடம் பேசியதே இல்லை என்றும் நோரா ஃபதேஹி அதிகாரிகளிடம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை நோரா ஃபதேஹி ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி முதல் பாகத்தில் இடம்பெறும் 'மனோகரி' பாடலில் பிரபாஸுடன் இணைந்து நடனம் ஆடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.