விஜய், திரிஷா இடையே காதலா?..கேவலமான ஒன்று.. விளாசிய பிரபலம்
விஜய் - திரிஷா
தமிழ் திரையுலகில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த திரை ஜோடி விஜய் - திரிஷா. இவர்கள் இருவரும் கடைசியாக லியோ படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இது இவர்கள் இருவரும் இணைந்த ஐந்தாவது முறையாகும்.
இதற்கு முன் கில்லி, திருப்பாச்சி, ஆதி மற்றும் குருவி ஆகிய படங்களில் இணைந்து நடித்திருந்தனர். இதை தொடர்ந்து சமீபத்தில், வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா GOAT படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து, இவர்கள் இருவர் குறித்தும் வதந்திகள் உலா வந்த வண்ணம் உள்ளது. அதற்கு தீனி போடும் வகையில், சமீபத்தில், நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு விஜய் மற்றும் திரிஷா இருவரும் தனி விமானம் மூலம் கோவா சென்றுள்ளனர்.
விளாசிய பிரபலம்
இந்த செய்தி சமூக வலைத்தளத்தில் காட்டுத்தீ போன்று பரவியது. தற்போது, இது குறித்து பிரபல பத்திரிகையாளரான பிஸ்மி சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில், " கில்லி பட சமயத்திலிருந்தே விஜய் மற்றும் திரிஷா இருவரும் நல்ல நண்பர்கள். அவர்கள் இருவருக்குமே கீர்த்தி சுரேஷ் நன்றாக தெரியும் என்பதால் ஒன்றாக சென்றுள்ளனர்.
இதில், தவறு ஒன்றும் இல்லையே. இதை காரணம் காட்டி இருவரையும் இணைத்து பேசுவது மிகவும் கேவலமான ஒன்று" என்று கூறியுள்ளார்.